கோட்டை

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
என்று தமிழ் ஆண்டை வரவேற்று
வாழ்த்தளிக்கும் சொல்லில்
முழுவதும் பன்னிரெண்டு எழுத்து
புதிய வருடம் அளிக்கும் காலம்
முழுமையா பன்னிரெண்டு மாதம்,
ஒவ்வொரு மாதமும் ஒரு சிறப்பு…

சித்திரையில் தோன்றும் சித்திரை திருநாள்
வைகாசியில் கொன்டாடும் விசாகம்
ஆனியில் எரியும் சூரியனின் ஒளி
ஆடி காற்றில் அம்மியும் ஒரு காத்தாடி
ஆவணியில் வருவான் குழந்தை கண்ணண்
புரட்டாசியில் தோன்றும் மாவிளக்கு…

ஐப்பசியில் பெயும் கடும் மழை
கார்த்திகையில் ஒளிவிடும் தீபம்
மார்கழியில் காணும் மலர் கோலம்
தை பிறந்தால் வழி திறக்கும்
மாசியில் கண் விழிக்கும் சிவராத்திரி
பங்குனியில் கொண்டாடும் உத்திரம்…

காலத்தின் பிடிப்பில் சிக்கிய
ஆட்டம்தான் நம் வாழ்க்கை…
தாயமும் பன்னிரெண்டும்
அதிர்ஷ்டத்தின் விளைவு…
நடுவில் குவியும் எண்களோ
யதார்தத்தை குறிக்கும்…

யதார்த்தங்கள்தான் வாழ்க்கையின்
கோட்டை..
அன்பும் பணிவும் அதன் அஸ்திவாரம்
நேர்மையும் நன்றியும் தூணாகும்
பொருமையும் முயற்சியும் அதன் கூரை
நட்பும் உறவும் வேலியே…

Photo Source: Google Images