A day without laughter is a day wasted.
Charlie Chaplin
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்
நம்மை சிரிக்க வைப்பது ஒரு கலை
அந்த சிரிப்புடன், நம்மை சிந்திக்க வைப்பது…
ஒரு இணையற்ற கைவினை
நகைச்சுவைக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைத்தது
நகை போன்ற பளபளப்பும்
சுவை போன்ற உணர்வும்
கிண்டல், நையாண்டி, பஞ்ச் கலந்து வந்தது
நேக்கா நோக்கா பைக்கான்னு கேட்டுவிட்டு.
வேறு யார் இதை கிண்டலாக சொல்லியிருக்க முடியும்
என் பின்னால் உக்காருங்கோ, நான் ஏழரையே போட்டு காட்டறேன்
தூங்கிட்டு இருந்த சிங்கத்தை தட்டி எழுப்பாதே என்று பஞ்ச் கேட்டிருப்போம்…ஆனா
தூங்கிட்டு இருந்த பேராசிரியர்க்கு போன் போட்டு எழுப்பி
நீங்க வெரும் தாஸா இல்ல லார்ட் லபக் தாஸா என்று கேட்டுவிட்டு
நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர்
பல ஆண்டுகளாக,
ரசிகர்களின் இதயங்களில் நகைச்சுவை மரங்களை நட்டவர்.
பின்னர் சமூக சேவையாக மரக்கன்றுகளை நட்டார்
ஒரு மரம் கவலைகளை மறந்து சிரிக்க உதவியது
ஒரு மரக்கன்று இயற்கையை சுவாசிக்க வைத்தது.
ட்விட்டரில் அவர் கூறினார்…
“எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்துதான் போகிறது! எனினும் பலர் இறப்பர்; சிலரே, இறப்பிற்கு பின்னும் இருப்பர்.”
விவேக்…அந்த சிலரில் நீங்கள் மாபெரும் ஒருவர்.