கதையிருக்குது திரையிருக்குது
நடித்து காட்ட நீ இல்லையே ராஜாத்தி
பாட்டிருக்குது பாவமிருக்குது
ஆடி பாட நீ இல்லையே ராஜாத்தி
பாடல்கள்…..
பல ஆனால்…..
அதன் மையம்…..
நீதானே…..
சிரிக்கும் முகம்…..
நெத்திப்பொட்டு உனக்கு மட்டும்
தேவை பாவை பார்வை
நினைக்க வைத்து…..
நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
நினைவு தந்தது யார்
மயிலோ…..
ப்ரியாவோ…..
விஜியோ…..
மொழியும் திசையும் என்ன
உன்னைக்கண்டால்
திரையில் பலரும் என்ன
நடிகை ஏங்கும் அழகிலாடும் கண்கள்
திரையின் உலகம் கெஞ்சும்
நீ இல்லையென்றால்
ரசிகர் இதயம் வருந்தும்
கொடுத்த தோற்றங்களில்
உன் மனதை
நான் அறிய
நீ மறைந்தாய்…
கதையிருக்குது திரையிருக்குது
ரசித்து பார்க்க நீ இல்லை இப்போது
பாட்டிருக்குது பாவமிருக்குது
திரும்பி வருவது நீ இங்கு எப்போது
-ஒரு கற்பனை ரசிகனின் அஞ்சலி
ps: Inspired by “Chippi irukkuthu muthum irukuthu” from Varumaiyin Niram Sivappu
Photo Source: Google Images