முதலில் ஒரு சுனாமியின் வெறியை கண்டோம் பிறகு மாபெரும் புயலின் வலிமையை கண்டோம் நிலநடுக்கத்தின் விளைவோ அன்று கண்ட துன்பம் எல்நீனோவின் பலனோ இன்று புயல்களின் வேகம் மழை பெய்து ஓடிய வெள்ளம் இடுப்பளவு ஏரிகளைத் திறந்து ஓடிய வெள்ளமோ நெஞ்சளவு மனிதன் பல்லாயிரம் ஆண்டுகளாய் மாறியுள்ளான் நெருப்பும் விவசாயமும் கண்டுபிடித்தான் போக்குவரத்தும் மருத்துவமும் பின்னே வந்தன முன்னேற்றம் என்று தொழில்மயமாக்கினான் அத்தியாவசியங்கள் நிறைவேற ஆடமபரத்தை நாடினான் நன்மையும் தீமையும் பின்னே வந்தன அவன் செல்வத்தை மதித்தான்…