You won’t get anything without hard work. What you get without hard work will never fructify
‘Thalaiva’ Rajnikanth
To a legion of ardent fans called ‘rajini veriyargal’, glimpse of his silhouette is enough to bring thundering cheer, and a reverberating applause. Over several decades, reams of pages may have been written and re-written with numerous attempts to analyze and rationalize. You may like or you may dislike. However you cannot ignore, and you cannot dismiss.
Thalaiva’s story arc is one of unparalleled proportions. Contrary to what the picture above depicts – Sivaji Rao, the bus conductor would have never envisioned and seen himself as a reigning superstar be it on any mirror in the world; however, Rajini of today can reminisce and cherish his bygone days of issuing tickets on a Bangalore city bus.
A screen journey that debuted five decades ago, is still entertaining millions with unwavering charisma and screen presence. From the era of five paise coin to the current bitcoin times, Rajini had the penchant to stay relevant and appeal to a broad-brush of demographics. It is probably his relentless pursuits to entertain and enthrall us. While doing so, staying grounded by the gravity of golden virtues, has guaranteed a perpetual shelf-life.
In a conventional actor, we see the maturity curve gradually peak over a period of time – typically between the second and third thirds of a career. I think Rajini’s case was an exception. The three parts were – Fantastic Actor, Star, and Super Star. Rajini, the actor, shone the brightest in the first third. The repertoire of films and acting credits are unrivaled – Moondru Mudichu, Avargal, 16 Vayathinile, Bhuvana Oru Kelvikuri, Bairavi, Mullum Malarum Thappu Thalangal, Aval Appadithaan, Johny – the list is virtually endless. The actor in him consistently raised the bar catapulting himself to a certain stardom. The sobriquet “Style King” got associated sometime in that era, all while doing simple, yet powerful and non-Demigod roles.
The decision to hitch a ride on to the “Star” ship was one of choice heeding to the economics imperative of the time. The competitive landscape was a driving factor as well, and choice to carve a niche was a master stroke. Rest is etched in the annals of history. In hindsight we may have lost a great actor to superstardom!
Rajini is a phenomenon and a collective emotion of fanatics and critics alike, and everything to everyone in between. Also, it is an experience that can never be explained. They say, you ought to get into a set of shoes to experience. I must say, those shoes can never be made to fit. Your feet ought to naturally align.
Happy Birthday, Thalaiva!
-ps: I couldn’t resist to sign-off with an ode in Tamizh (below)
நான்கு தசாப்தங்களுக்கும் மேலே
நடந்து கொண்டிருக்கிறது
இந்த ஒரு நட்சத்திர கலை பயணம்
அபூர்வ ராகங்கள் படத்தில்
அடி எடுத்து வைத்த ரஜினி
முள்ளும் மலரும் என்று அசத்தி
அவள் அப்படித்தான் அனால்
அவர்கள் நினைத்தாலே இனிக்கும்
ஒரு வித்தியாசமான நடிப்பின்
அவர் உச்சத்தை அடைந்தார்
பொல்லாதவனாய் தோன்றிய பில்லா
நெற்றிக்கண்ணை திறந்து
முரட்டு காளையை அடக்கிய போக்கிரி ராஜா
அன்புள்ள ரஜினிகாந்த் என்று அழைத்ததும்
வெற்றிப் பயணத்தை இடைநிறுத்தியது
ராகவேந்திரரின் அருள் பெற்ற
நான் சிகப்பு மனிதன்
வடக்கை நோக்கி கிராஃப்தார் செய்ய சென்றதும்
நான் படிக்காதவன்தான் ஆனால்
நான் அடிமை இல்லை என்று உணர்தியும்
மனிதனான மாவீரனின் கொடி பறந்தது
பணக்கார மாப்பிள்ளை ஒரு ராஜாதி ராஜா
தளபதி தர்மதுரைக்கு மன்னனின் மகுடம் சூட
விறு விறுவென அண்ணாமலையின் உச்சம்
வானளவை எட்டியது
பாண்டியனுக்காக ஒரு முறை
கீழ் இறங்கிய எஜமான்
தன் ஐந்தாம் எட்டில் பார்த்தது
வீரா முதல் படையப்பா வரை
ஐந்து வெற்றி படங்களின் புகழை
நூற்றாண்டு மாறியது
படங்களும் மாற முயற்சித்தன
திரையில் இமயம் சென்றார் பாபா
ரசிகனின் இதயம் ஏற்க மறுத்தது
சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் ரூபத்தில்
தோன்றிய பாத்திரங்கள்
உலக அளவில் புகழ் பெற்றது
ரசிகனின் இதயம் மலர்ந்தது
தன் எட்டாம் எட்டு முதல்
எக்ஸ்பெரிமென்ட் செய்ய விருப்பபட்டிருக்கலாம்
கோச்சடையான் மற்றும் லிங்கா
வந்த வேகத்தில் வீடு திரும்பியதில்
ரசிகனே இமயம் செல்ல உறுதியாக நின்றான்
இரண்டாம் கட்ட எக்ஸ்பெரிமென்டில்
வயது ஏறியது, முடி நரைத்தது
அனால் ஸ்டைல் பெருகியது
கபாலியும் காலாவும் கலக்கினார்கள்
பேட்டையும் தர்பாரும் மாஸ் சிதறின
எப்படி விண்வெளிக்கு சென்ற ராக்கெட்
பூமிக்குத் திரும்ப வேண்டுமோ
உலகம் சுற்றும் மனிதனும்
வீடு திரும்ப வேண்டும்…
என்ற பழமொழியை கையில் கொண்டு
இக்காலகட்டத்தில் வந்து இறங்கினார்
அண்ணாத்தே !
என்ன சொல்வது…
பாலுவின் இறுதி பதிப்பில்
அவரின் ஆத்மார்த்தமான
பாடும் குரல் ஒலிக்க…
ரஜினியின் ஸ்டைல்
சூப்பர்ஸ்டாரின் மாஸ்
தலைவரின் எனர்ஜி
நடிகனின் திரை இருப்பு
இதில் எதுவும்
ஒரு துளி கூட குறையவில்லை…
அடுத்த கட்ட எக்ஸ்பெரிமென்டிற்கு
நாங்க ரெடி
நீங்க ரெடியா?
ஐந்து பைசா நாணயம்
காலங்களிலுருந்து
இன்று பிட்காயின் காலம் வரை
ஆறிலிருந்து அறுபது வரை
சிறுவனலிருந்து முதியோர் வரை
மனதில் என்றும் இருக்கும்
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
– ஒரு ரசிகன்